உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில் 23வது பட்டமளிப்பு விழா 

சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில் 23வது பட்டமளிப்பு விழா 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், 23வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் வனிதாமணி வரவேற்றார். ைஹதராபாத்தில் உள்ள இந்தியன் இம்யூனாலஜிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்தகுமார், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: மதிப்பெண்களும், பட்டங்களும் மட்டுமே ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை. உண்மையான வெற்றி என்பது கவனத்துடன் செயல்படுவதற்கான ஒழுக்கம், இலக்குகளை அடைய கடின உழைப்பு, தொடர் கற்றல், அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்க சிறந்த தகவல் தொடர்பு, நீடித்த மரியாதையை பெற நேர்மையும், பணிவும் மற்றும் நோக்கம் உள்ள வாழ்க்கையை உருவாக்க சமூக சேவையாகும். வெற்றி என்பது நீங்கள் சேர்க்கும் செல்வத்தால் மட்டுமே. மற்றவர்களின் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தாலும் அளவிடப்படுகிறது. இவ்வாறு, பேசினர். கல்லுாரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரியா நன்றி கூறினார். கல்லுாரி தலைவர் வெங்கடேஷ், துணை தலைவர் விஜயமோகன், செயலர் சேதுபதி மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை