உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அணைகளில் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு; மின் நிலையங்களில் தேவைக்கேற்ப உற்பத்தி

அணைகளில் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு; மின் நிலையங்களில் தேவைக்கேற்ப உற்பத்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி,: நீலகிரி அணைகளில், 90 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் இருப்பதால் தேவைக்கேற்ப மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் குந்தா, பைக்காரா மின் வட்டத்தில், உள்ள, 12 மின் நிலையங்கள் மூலம், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. குந்தா மின் வட்டத்தில் மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும், அவலாஞ்சி அணை, 171 அடி, எமரால்டு அணை,184 அடி கொண்டதாகும். இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் குந்தா, கெத்தை, பரளி, பில்லுார் மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. தென் மேற்கு பருவமழையில் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. எமரால்டு, அவலாஞ்சி அணையில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது. குந்தா, பைக்காரா மின் வட்டத்தில் உள்ள பிற அணைகளிலும், 90 சதவீதம் அளவுக்கு நீர் மட்டம் இருப்பில் உள்ளது. அணைகளில் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பில் இருப்பதால், தினசரி, 500 முதல், 600 மெகாவாட் வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் உற்பத்தி அதிகரிப்பால் ஈரோடு, மதுரை மற்றும் சென்னையில் உள்ள மின் மையத்திற்கு சீராக மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
செப் 08, 2024 10:39

ஜாக்கிரதையா இருக்கணும். சைடு போர் போட்டு தண்ணீரை திருடும் திருட்டு திராவிடனுங்க அதிகமாயிட்டாங்க.


Kasimani Baskaran
செப் 08, 2024 07:29

தண்ணீர் இல்லை என்றால் மட்டும் கர்நாடகாவிடமும், கேரளாவிடமும் இவர்கள் அப்படியே கேட்டு விடுவார்கள்... இத்துப்போன மாநில அரசு, அதற்க்கு முட்டுக்கொடுக்க லட்சக்கணக்கில் அறிவாளிகளும் , உடன்பிறப்புக்களும் இருக்கும் வரை ஒன்றும் மாறாது.