உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூண்டும் வைத்தும், கேமரா பொருத்தியும் வனத்துறைக்கு போக்கு காட்டும் சிறுத்தை

கூண்டும் வைத்தும், கேமரா பொருத்தியும் வனத்துறைக்கு போக்கு காட்டும் சிறுத்தை

தொண்டாமுத்தூர்:அட்டுக்கல்லில், வனத்துறை வைத்துள்ள கூண்டில் சிக்காமல், 5 நாட்களாக சிறுத்தை போக்கு காட்டி வருகிறது.கோவை வனச்சரகத்திற்குட்பட்ட அட்டுக்கல் மற்றும் கெம்பனூர் பகுதியில், கடந்த ஒரு மாதமாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த 8ம் தேதி, தோட்டத்தில் இருந்த இளம் கன்றுக்குட்டியை கடித்து கொன்றது. அதன் பின்னும், தோட்டங்கள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் பகுதிகளிலும், சிறுத்தை தென்படும். கால்நடைகளுக்கும், கிராம மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, வேறு பகுதியில் உள்ள அடர் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், அரசிடம் அனுமதி பெற்றனர். கடந்த, ஆக., 27ம் தேதி, அட்டுக்கல் பெரும்பள்ளத்தில், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், 2 இடங்களில் கூண்டு வைத்தனர். கேமராக்களும் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், 5 நாட்களாக, சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தை நடமாட்டம் அடிக்கடி தென்பட்ட இடங்களில், கூண்டு வைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கேமரா வைத்தும், நேரில் சென்றும் கண்காணித்து வருகிறோம். இருப்பினும், இது வரை, கேமராக்களிலும் சிறுத்தை தென்படவில்லை. இந்த பகுதியில் இருந்து, வேறு பகுதிக்கு சென்று விட்டதா என தெரியவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை