உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வி.எஸ்.பி., கல்லுாரியில் அனைத்து இடமும் புல்

வி.எஸ்.பி., கல்லுாரியில் அனைத்து இடமும் புல்

கோவை : வி.எஸ்.பி.இன்ஜினியரிங் கல்லூரிகளில், 100 சதவீத இடங்கள் நிரம்பின.தமிழக இன்ஜி., சேர்க்கைக்கான கவுன்சிலிங், கடந்த ஜூலை 22ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் வரை, மூன்று சுற்றுகளாக நடந்தது. கவுன்சிலிங்கில் 433 கல்லூரிகள் பங்கேற்றன. கரூர் மற்றும் கோவையில் செயல்பட்டு வரும் வி.எஸ்.பி., கல்லூரியில், 100 சதவீத இடங்கள் நிரம்பின. கல்லூரி நிறுவன தலைவர் பால்சாமி கூறுகையில், ''இளங்கலை, 14, முதுநிலையில், 3 பாடப்பிரிவுகள், ஆராய்ச்சி துறைகள், 13 உடன் இயங்கி வருகிறது. என்.பி.ஏ., மற்றும் 'நாக்' தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. பல்கலை மானியக்குழுவால், சிறந்த தன்னாட்சி கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒன்.எஸ்., டெக்னாலஜி நிறுவனத்தின் சார்பில், 'பெஸ்ட் பிளேஸ்மென்ட்' கல்லூரி என்ற சான்றிதழ் பெற்றுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமன்றி பிற மாநில மாணவர்களும் எங்கள் கல்லூரியில் விரும்பி சேர்ந்து பயில்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ