மேலும் செய்திகள்
மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
27-Aug-2024
மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
27-Aug-2024
அன்னூர்:அன்னூரில் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் நடந்தது.அன்னூர், சி.டி.சி., டெப்போ எதிர்ப்புறம், மங்கள விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக கருவறை, கோபுரம், முன் பிரகாரம் அமைத்து பல திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த 29ம் தேதி மாலை, விநாயகர் வழிபாடுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது.இரவு முதற்கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. நேற்றுமுன்தினம் அதிகாலை 9:00 மணிக்கு, கோபுரத்திற்கும், மூலவர் மங்கள விநாயகருக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.இதையடுத்து விநாயகருக்கு, மகா அபிஷேகமும், தீப ஆராதனையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னூர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
27-Aug-2024
27-Aug-2024