உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழைப்பழம், பூ விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழைப்பழம், பூ விலை உயர்வு

கோவை:விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, நேற்று சந்தையில் வாழைப்பழம், பூ விலை உயர்ந்து காணப்பட்டது.வாழைப்பழ வியாபாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே அதிகரித்து காணப்பட்ட, வழைப்பழம் விலை, விநாயகர் சதுர்த்தியால் மேலும் உயர்ந்துள்ளது. 12 பழங்கள் கொண்ட ஒரு சீப் பூவன்பழம், 100 முதல் 120 ரூபாய் வரை விற்கிறோம். செவ்வாழைப்பழம் கிலோ 120 ரூபாய்க்கும், மோரீஸ் வாழைப்பழம் கிலோ 80 ரூபாய்க்கும் விற்கிறோம்' என்றனர்.

பூக்கள் விற்பனை ஜோர்

கடந்த மாதம் விசேஷ நாட்கள் குறைவு என்பதால், உதிரிப்பூக்கள் விலை மலிவாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, நேற்று விலை அதிகரித்தது. மல்லி, முல்லை மற்றும் ஜாதி மல்லி ஆகிய மூன்று பூக்களும் கிலோ 800 ரூபாய்க்கும், செவ்வந்தி 240 ரூபாய்க்கும், அரளி 200 ரூபாய்க்கும், ரோஜா கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி