கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.வங்கிகளில் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்; வாடிக்கையாளர்களின் வங்கிக் கட்டணங்களை குறைக்க வேண்டும்; தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; வாரத்தில் 5 நாட்கள் வேலை, வங்கி செயல்பாடுகளில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு கட்டமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராஸ்கட் ரோடு கிளை முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகி செந்தில்குமார் தலைமை வகித்தார். கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சையது இப்ராஹிம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி ஆத்ரேயா உட்பட பலர் பேசினர்.