உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாகாளியம்மன் கோவிலில் வரும் 19ல் பூமிதி திருவிழா

மாகாளியம்மன் கோவிலில் வரும் 19ல் பூமிதி திருவிழா

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 3ம் தேதி துவங்கியது; 4ம் தேதி சக்தி கும்பம் ஸ்தாபனம் நடந்தது. கடந்த, 6ம் தேதி கோவில் பூவோடு வைத்தல் நடைபெற்றது.வரும், 12ம் தேதி கொடிமுடி தீர்த்தம், 14ம் தேதி பழநி தீர்த்தம், 15ம் தேதி நல்லுாத்து தீர்த்தம், 16ம் தேதி கூடுதுறை தீர்த்தம், 17ம் தேதி தெய்வகுளம் தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிேஷக ஆராதனை நடக்கிறது.வரும், 18ம் தேதி காலை குண்டம் திறப்பு, மாலையில் விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு புறப்படுதல்; இரவு, 8:00 மணிக்கு அகத்துார் அம்மன் தீர்த்தம் கொண்டு வருதல்; இரவு, 9:00 மணிக்கு அக்னி குண்டம் பூவளர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 19ம் தேதி காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதன்பின், அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு வழிபாடு நடக்கிறது. 21ம் தேதி காலை, 9:00 மணிக்கு சுவாமி ஊர்வலம், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு, மஹா அபிேஷகம், ஆராதனை நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ