மக்கள் தொகை கணக்கெடுப்பு
கோவை: மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சுய கணக்கெடுப்பு பதிவு நேற்று துவங்கியது. மாநகராட்சி அலுவலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள், ஊழியர்கள் தங்களின் சுய விபரங்களை பதிவு செய்தனர். வருகிற 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு நடக்கிறது. ஆக. 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை வீடு வீடாக கணக்கெடுப்பு பணி நடைபெறும். இது தொடர்பாக டவுன்ஹால் பகுதியில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகித்து மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.