உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடசித்துார் அரசு பள்ளியில் இன்று நுாற்றாண்டு விழா

வடசித்துார் அரசு பள்ளியில் இன்று நுாற்றாண்டு விழா

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, வடசித்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இன்று (7ம் தேதி) நுாற்றாண்டு விழா நடக்கிறது.கிணத்துக்கடவு வட சித்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டு, நுாறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை கொண்டாடும் விதமாக, பள்ளியில் இன்று நுாற்றாண்டு விழா நடக்கிறது.விழாவுக்கான, மேடை, விளக்குகள், இடம் ஒதுக்கீடு மற்றும் இதர பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், விழாவை சிறப்பிக்க நுாற்றாண்டு விழா ஜோதி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஜோதி ஊர்வலம் சொல்பவர்களுக்கு டி-ஷர்ட் போன்றவை வழங்கப்படவுள்ளது. மேலும், விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !