உள்ளூர் செய்திகள்

பி.டி.ஓ.க்கள் மாற்றம்

உடுமலை: மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில், 5 பி.டி.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறையில், பி.டி.ஓ.க்கள் ஐந்து பேரை பணியிடமாற்றம் செய்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டுள்ளார். மூலனுார் பி.டி.ஓ. சரவணன், திருப்பூருக்கும் (கிராம ஊராட்சி), அங்கிருந்த கோகிலா வட்டார ஊராட்சிக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் வட்டார ஊராட்சி பி.டி.ஓ.வாக பணிபுரியும் கே.சரவணன், பல்லடத்துக்கும் (கி.ஊ), ; அங்கிருந்த அனுராதா வட்டார ஊராட்சிக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பல்லடத்தில் பணிபுரியும் ஜெயந்தி, மூலனுாருக்கு (கி.ஊ) மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த பி.டி.ஓ., க்கள் பணியிட மாற்றத்தை திருப்பூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை