குழந்தைகளின் முதல் விமான பயணம்
அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவன தலைவர் மற்றும் எம்.கே. பவுண்டேஷன்ஸ் நிர்வாக அறங்காவலர் மணிகண்டனின் முயற்சியால் 50 குழந்தைகள் முதல் முறையாக விமானத்தில் பறந்தனர். கோவையில் இருந்து பெங்களூரு சென்ற குழந்தைகள், விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். மணிகண்டன் கூறுகையில், ‘‘முதல் விமானம், முதல் கனவு’ திட்டத்தின் மூலம், எந்தவொரு கனவும் தங்களுக்கு எட்டாதது அல்ல என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் விதைக்க விரும்புகிறோம்,’’ என்றார்.