மேலும் செய்திகள்
பிளஸ்-2 பொது தேர்வு எழுதும் 6,320 மாணவர்கள்
03-Mar-2025
கோவை, : பிளஸ்2 பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது.128 மையங்களில், 35 ஆயிரத்து, 999 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.காலை, 10:00 மணிக்கு துவங்கி மதியம், 1:15 மணிக்கு தேர்வு முடிவடைகிறது. பிளஸ் 1 தேர்வுகள் வரும், 5 முதல், 27ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு மார்ச், 28 முதல் ஏப்., 15ம் தேதி வரையும் நடக்கிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வை, 128 மையங்களில், 363 பள்ளிகளை சேர்ந்த, 35 ஆயிரத்து, 999 மாணவர்கள் எழுத உள்ளனர்.பிளஸ் 1 பொதுத்தேர்வை, 366 பள்ளிகளின், 36 ஆயிரத்து, 664 மாணவர்கள் எழுத உள்ளனர். பிளஸ்2 தேர்வை, 624 பேரும், பிளஸ்1 தேர்வை, 407 பேரும் தனித்தேர்வர்களாக எழுதுகின்றனர். இதற்கென, ஏழு வினாத்தாள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களுக்கு வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வை சிறப்பான முறையில் நடத்தும் பொருட்டு, 14 வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர்கள், 128 முதன்மை கண்காணிப்பாளர்கள், 128 துறை அலுவலர்கள், 37 வழித்தட அலுவலர்கள், 290 பறக்கும் படை, நிலையான படை மற்றும், 2,150 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாற்றுத்திறன் மாணவர்களுக்காக, 310 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.போதுமான போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ள நிலையில், பயமின்றி தேர்வெழுத மாணவர்களை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கு உறுதுணையாக, 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி, ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், வரும், 26 முதல், 28ம் தேதி வரை, கோவை 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் வழிகாட்சி நிகழ்ச்சி நடக்கிறது.இவர்களுடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. நிகழ்ச்சியில், அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை, உயர்கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும், நேரில் விடை காணலாம். காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை, 130க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் சந்தேகங்கள், குழப்பங்களுக்கு தீர்வு தருகின்றன; அனுமதி இலவசம்.
03-Mar-2025