உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர்த்திருவிழா துவக்கம்

வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர்த்திருவிழா துவக்கம்

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில், கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியதுமேட்டுப்பாளையம் -- காரமடை சாலையில், சிவன்புரம் அருகே அற்புதகெபி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது. இதன் தேர்த்திருவிழா கொடியேற்றம், நேற்று மாலை, நடைபெற்றது. கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ், கொடியேற்றி வைத்து, திருப்பலியை நிறைவேற்றினார். வரும் 9ம் தேதியிலிருந்து, 12ம் தேதி வரை மாலை, 5:30 மணிக்கு ஜெபமாலையும், சிறப்புத் திருப்பலியும் நடக்க உள்ளது. வரும் 14ம் தேதி மாலை பாதிரியார் கிருபாகரன் நாதன் தலைமையில் ஒப்புரவுப் பெருவிழா நடைபெற உள்ளது. 15ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஜீவஜோதி ஆசிரமம் இயக்குனர் பாதிரியார் ஆண்டனி இயேசுராஜும், 11:00 மணிக்கு பாதிரியார் ஆண்டனி வினோத் ஆகியோர் விழா திருப்பலியை நிறைவேற்றுகின்றனர். மாலை, 5:30 மணிக்கு பாதிரியார் ஆனந்த் குமார் தலைமையில், பாதிரியார்கள் அன்னைக்கு நன்றி திருப்பலியை நிறைவேற்றுகின்றனர். மாலை, 7:00 மணிக்கு அன்னையின் ஆடம்பரத் தேர் பவனி நடைபெற உள்ளது. முடிவில், நற்கருணை இறையாசீர் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை