உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

கஞ்சா விற்றவர் கைது பேரூர்: பேரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காளம்பாளையம், தீத்திபாளையம் பிரிவு அருகே குனியமுத்தூர், ஆறுமுககவுண்டர் வீதியைச் சேர்ந்த மாரிமுத்து,40 என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார். வழக்கு பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்தனர். 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கிணற்றில் ஆண் சடலம் தென்னமநல்லூர்: கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரை சேர்ந்த காந்துராஜா நாயக்கா,46 குடும்பத்துடன், தென்னமநல்லூர், வடக்கலூரில் வாழை இலை அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஜூலை 7ம் தேதி, காந்துராஜா வீட்டில் சண்டையிட்டு விட்டு, வெளியே வந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் சடலமாக கிடந்தார். சடலத்தை மீட்ட தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை