உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு ஊழியர்களை மிரட்டும் இருட்டு! இத்தனைக்கும் இது புதிய அபார்ட்மென்ட் வளாகம்

கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு ஊழியர்களை மிரட்டும் இருட்டு! இத்தனைக்கும் இது புதிய அபார்ட்மென்ட் வளாகம்

புகார் மீது நடவடிக்கையில்லை

கவுண்டம்பாளையம், 33வது வார்டு, அரசு குடியிருப்பு வளாகத்தில், கடந்த ஆறு மாதமாக நான்கு கம்பங்களில் உள்ள தெரு விளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து, பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.- சண்முகம், கவுண்டம்பாளையம்.

சாலையை மறைக்கும் கிளைகள்

மதுக்கரை, லட்சுமி நகர் பேஸ் 1 பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களில், தாழ்வான கிளைகள் சாலையை மறைத்தபடி உள்ளது. வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. பள்ளி வேன் போன்ற வாகனங்கள் வருவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது.- ஜெயமோகன், மதுக்கரை.

வீணாகும் குடிநீர்

நல்லாம்பாளையம், விஜயா நகரில், கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடை பணிக்காக, குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. பணியின் போது குடிநீர் குழாய் உடைந்து, பெருமளவு தண்ணீர் வீணாகிறது. பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.- ஸ்ருதி, நல்லாம்பாளையம்.

தடுமாறும் வாகனங்கள்

பீளமேடு, 24வது வார்டு, பி.ஆர்.புரம், சாஸ்திரி ரோடு, அவிநாசி ரோடு சந்திப்பில், சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. பெரிய, பெரிய குழிகளாக இருக்கும் சாலையில், வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.- செல்வநாராயணன், பீளமேடு.

பணிகளை துரிதப்படுத்தணும்

ஜி.என்.மில்ஸ், உருமாண்டம்பாளையம், 13வது வார்டு, சாஸ்திரி நகரில், பாதாள சாக்கடை பணிகளுக்கு சாலை தோண்டப்பட்டது. ஒரு வாரத்திற்கு மேலாகியும், எந்த பணிகளும் நடக்கவில்லை. குடியிருப்புவாசிகள் சாலையை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்.- பார்வதி, ஜி.என்.மில்ஸ்.

விபத்தை தடுக்க தடுப்புகள்

அவிநாசி ரோடு, இந்தியன் ஆயில் பங்க் எதிரில் உள்ள, 'யூ டேர்ன்' இரண்டு பக்கத்திலும் தடுப்புகள் இல்லை. லட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், வலதுபுறம் திரும்ப மிகவும் சிரமமாக உள்ளது. உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து, மின்னல் வேகத்தில் வரும் வாகனங்களால் விபத்து நடக்கிறது.- சுந்தரராஜ், பீளேமடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !