உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறந்த கோழிகளால் சீர்கேடு; சுகாதாரத்துறையினர் ஆய்வு

இறந்த கோழிகளால் சீர்கேடு; சுகாதாரத்துறையினர் ஆய்வு

சூலுார்; 'இறந்த கோழிகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது, என, சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிப்பண்ணைகளில் இருந்து இறந்த கோழிகளை பொது இடங்கள், நீர் நிலைகளில் வீசுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர்கள் கூறுகையில்,' கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகளை பொது இடங்களிலோ, நீர் நிலைகளிலோ வீசக் கூடாது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்பு ஏற்படும். இறந்த கோழிகள் மற்றும் கோழி கழிவுகளை பண்ணை வளாகத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில், ஆழமான குழி தோண்டி புதைக்க வேண்டும். அதில், கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் போட வேண்டும். இதை மீறி பொது இடங்களில் வீசுவது சட்ட விரோதமான செயல் ஆகும். அவ்வாறு செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ