உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதார நிலையங்களில் யோகா பயிற்றுனர்கள் நியமிக்க முடிவு

சுகாதார நிலையங்களில் யோகா பயிற்றுனர்கள் நியமிக்க முடிவு

சோமனுார்: கோவை மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.உடலுக்கும், மனதுக்கும் பல்வேறு புத்துணர்ச்சிகளை யோகா பயிற்சி தருகிறது. உடல் வலிமை, ஆற்றல் அதிகரித்து, மன அமைதி, நெகிழ்வு தன்மை கிடைக்கிறது. பல நோய்களுக்கு தீர்வாக அமையும் யோக பயிற்சிகளை, அனைத்து தரப்பு மக்களும் செய்து பயன் பெறும் வகையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில், யோகா பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆயுஷ் தேசிய நல்வாழ்வு மையங்களில், பகுதி நேர யோகா பயிற்றுனர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். கோவை மாவட்டத்தில், கீரணத்தம், சுல்தான்பேட்டை மருத்துவமனைகள், பொகலுார், சீலியூர், காரமடை, வெள்ளக்கிணறு, துடியலுார், சோமனுார், சர்க்கார் சாமக்குளம் உள்ளிட்ட, 23 ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஆண், பெண் என, தலா இரு யோகா பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த யோகா பயிற்றுனர்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மற்றும் முகாம்களில் யோகா பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ