உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிபென்ஸ் எக்ஸ்போ நிறைவு

டிபென்ஸ் எக்ஸ்போ நிறைவு

கோவை:கோவை அரசு கலைக்கல்லுாரியின் பாதுகாப்பியல் துறை சார்பில், இரண்டு நாள் 'டிபென்ஸ் எக்ஸ்போ' எனும் பாதுகாப்பியல் கண்காட்சி, நேற்று முன்தினம் துவங்கியது. நிறைவு நாளான நேற்று, இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் ஸ்ரீனிவாசன்(ஓய்வு) முப்படைகளில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள், தயாராகும் முறை குறித்து எடுத்துரைத்தார்.கண்காட்சியில் சிறந்த முறையில் பங்களித்த, பாதுகாப்பியல் துறை மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்பியல்துறை பேராசிரியர் பெருந்தமிழ் கபிலன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ