உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாமதமாகும் பி.ஏ.பி., நீர்; விவசாயிகள் கொந்தளிப்பு

தாமதமாகும் பி.ஏ.பி., நீர்; விவசாயிகள் கொந்தளிப்பு

- நமது நிருபர் -பி.ஏ.பி.,ல் தற்போது 3ம் மண்டல பாசனம் நடக்கிறது. முதல் சுற்று பாசனம் முடிந்து விட்டது. தற்போது 2ம் சுற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்து இருக்க வேண்டும்.ஆனால், சர்க்கார் பதி மின் உற்பத்தி நிலையம் பழுதானதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.2ம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பது தாமதம் ஆகி வருகிறது. தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில், 'தற்போது வெயில் காலம். சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லாவிட்டால் கருகி விடும். உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு கொண்டு வந்து பாசனத்திற்கு திறக்க வேண்டும். இல்லை எனில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !