உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடையில் தீ பந்த சேவை; பக்தர்கள் பங்கேற்பு

காரமடையில் தீ பந்த சேவை; பக்தர்கள் பங்கேற்பு

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று நடந்த தீபந்த சேவையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை செலுத்தினர். காரமடை அரங்கநாதர் கோவிலில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று மாலை பல்வேறு ஊர்களில் இருந்து, பக்தர்கள் தீ பந்தங்களை எடுத்து வந்து, நான்கு ரத வீதிகளில் ஆடி கோவிலுக்குச் சென்று நேர்த்தி கடனை செலுத்தினர். சரவணம்பட்டியைச் சேர்ந்த கரிவரத பெருமாள் கோவிலுக்கு உட்பட்ட பக்தர்கள், 650 மீட்டர் காடா துணி கொண்ட ராட்சத தீ பந்தத்தை தெப்பக்குளத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு சிறப்பு பூஜை செய்த பின், மாலை, 6:00 மணிக்கு தீபந்தத்தை, 80க்கும் மேற்பட்ட தாசர்கள் எடுத்து ஆடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை