உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்

தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்

கோவை; தர்மராஜா திரவுபதியம்மன், ஸ்ரீ குண்டத்து பத்ரகாளியம்மன் கோவில், 329ம் ஆண்டு 60 அடி குண்டம் திருவிழா விமரிசையாக நேற்று நடந்தது.கோவை வைசியாள் வீதிக்கும் கெம்பட்டி காலனிக்கும் இடைப்பட்ட பகுதியில் தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின், 329ம் ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடந்தது.கோவில் முன்பு 60 அடி குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த பிப்.,17 அன்று பராசக்தி அழைப்பும், ஸ்ரீநாக விநாயகர், தர்மராஜா திரவுபதியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.புஷ்பகுண்டம் திறப்பு, மஹா சிவராத்திரி அபிஷேகம், பள்ளயபூஜை ஆகியவைகளை தொடர்ந்து, உக்கடம் விநாயகர் கோவிலிலிருந்து அன்னபட்சி வாகனத்தில் திரவுபதியம்மன் எழுந்தருளி ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா வந்தனர்.கோவிலுக்கு முன்பு எரிகரும்பினால் இட்ட 60 அடி புஷ்பகுண்டத்தில் மாலை 6:00 மணிக்கு திருவிளையாட்டுடன் பூசாரி இறங்கினார்.தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக இறங்கினர்.இரவு 7:00 மணிக்கு வெண்ணை அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அம்மன் ஊர்பவனி ஆகியவை நடந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு பொங்கல் வைக்கும் வைபவம், மாவிளக்கு, மார்ச் 1 அன்று இரவு 8:00 மணிக்கு அர்ஜூனன் தபசு, போத்திராஜா காவுகொள்ளுதல், மார்ச் 2 அன்று மதியம் 2:00 மணிக்கு, வசந்தோற்சவம், மஞ்சள்நீர் ஊர்வலம் ஆகியவை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை