உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க., மாணவரணி ஆர்ப்பாட்டம்

தி.மு.க., மாணவரணி ஆர்ப்பாட்டம்

கோவை; மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணித்து, மீண்டும் மொழிப்போருக்கு மத்திய அரசு நிர்பந்திப்பதாக கூறி, தி.மு.க., உள்ளிட்ட மாணவர்கள் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில், கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மாநகர் மாவட்ட அமைப்பாளர் சிவபிரகாசம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், ரவி, முருகேசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மாணவரணி தலைவர் வக்கீல் ராஜிவ்காந்தி, மேயர் ரங்கநாயகி, துணைமேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை