உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடுவீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பி.எல்.ஓ., ஆப்ல் பதிவிட அறிவுறுத்தல்

வீடுவீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பி.எல்.ஓ., ஆப்ல் பதிவிட அறிவுறுத்தல்

பொள்ளாச்சி:ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், பி.எல்.ஓ., ஆப் வாயிலாக வாக்காளர் விபரங்களை சரிபார்க்க உள்ள நிலையில், பட்டியலில் இடம் பெறாதவர்களின் பெயர்களும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரும் அக்., 29ல் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, 'சுருக்கமுறை திருத்தம் - 2025' துவங்குகிறது. நவ., 28ம் தேதி வரை நடைபெறும் சுருக்கமுறை திருத்தத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மேற்கொள்ளப்படுகிறது.வரும் ஜன., 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்களர்களும் பட்டியலில் இணைக்கப்படுகின்றனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) மற்றும் ஓட்டுச்சாவடி மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள், அனைத்து வாக்காளர் வீடுகளுக்கும் நேரடியாக சென்று, வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இறந்தோர் விபரங்களை பெற்று, பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும் உள்ளனர்.மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:பெரும்பாலான ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி மேற்பார்வையாளராக, ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.வரும், 2025, ஜன., 6ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட ஏதுவாக பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் கட்ட நடவடிக்கையாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி மைய பகுதியில் வசிக்கும் அனைத்து வாக்காளர்களின் விபரங்களை, வீடுவீடாக சென்று சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளவர்.கள ஆய்வின்போது, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மொத்த உறுப்பினர்கள், அவர்களில் எத்தனை பேர், வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர் என கண்டறிய உள்ளனர். அவர்களுக்கான, பி.எல்.ஓ., ஆப் வாயிலாக வாக்காளர் விபரங்களை, சரிபார்ப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்யும் பணியை 'பி.எல்.ஓ' ஆப் வாயிலாக சம்பவ இடத்தில் இருந்தபடியே பதிவு செய்ய முடியும். மேலும், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத நபர்கள் இருப்பின், அவர்களின் விபரத்தையும் அந்த ஆப்பில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை