ரூ 4.24 கோடியில் கனவு இல்லம்: 137 வீடுகள் கட்டும் பணி தீவிரம்
அன்னுார்: அன்னுார் ஒன்றியத்தில் நான்கு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 137 கனவு இல்ல வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.தமிழக அரசு சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் தலா 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, அன்னுார் ஒன்றியத்தில் நடப்பு நிதியாண்டில், 4 கோடியே 24 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 137 வீடுகள் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.வடக்கலூர் ஊராட்சியில் 22 வீடுகளும், கனுவக்கரை ஊராட்சியில் 19 வீடுகளும், குன்னத்துார் ஊராட்சியில் ஒரு வீடு, அடுத்து காரே கவுண்டம்பாளையம் ஊராட்சியில் இரண்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, ரவீந்திரன் ஆகியோர் கனவு இல்ல திட்ட வீடுகளை ஆய்வு செய்தனர்.பணிகளை வேகப்படுத்த வேண்டும். விரைவில் முடிக்க வேண்டும், என, பயனாளிகளுக்கும், ஊராட்சி செயலர்களுக்கும் அறிவுறுத்தினர்.