உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார் மோதி மூதாட்டி பலி

கார் மோதி மூதாட்டி பலி

அன்னுார்; பொன்னேகவுண்டன்புதூரை சேர்ந்த கிட்டான் மனைவி கண்ணம்மாள், 75. இவர் நேற்று முன்தினம் மாலை பொன்னே கவுண்டன்புதுாரில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒரு கார், கண்ணம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த கண்ணம்மாள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற காரை, கண்காணிப்பு கேமரா பதிவு அடிப்படையில் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை