உள்ளூர் செய்திகள்

நிர்வாகிகள் தேர்வு

அன்னுார்: பொகலூர் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் நான்காம் ஆண்டு துவக்க விழா நடந்தது. விழாவில், ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் அம்பாள் பழனிச்சாமி, முன்னாள் துணை சேர்மன் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வியாபாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. சங்கத்தின் தலைவராக செந்தில்குமார், துணைத் தலைவராக சண்முகம், செயலாளராக பாலசுப்பிரமணியம், இணை செயலாளராக துரைசாமி, பொருளாளராக சுரேஷ்குமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ