உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ., அலுவலக திறப்பு விழாவுக்கு கால்கோள்

பா.ஜ., அலுவலக திறப்பு விழாவுக்கு கால்கோள்

கோவை: பா.ஜ., புதிய மாவட்ட அலுவலக கட்டடத் திறப்புக்கான கால்கோள் நடும் விழா, நேற்று நடந்தது.கோவை பீளமேடு பகுதியில், பா.ஜ., அலுவலகத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை வரும், 25ம் தேதி கோவை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்க உள்ளார்.இதற்கான கால்கோள் நடும் விழா நேற்று நடந்தது. விழாவில், கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிதாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தில், தரை தளம், மற்றும் இரு மாடிகளில், 20 அறைகள் உள்ளன. இரு கூட்டரங்குகள், சமையலறை, டைனிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்த படியாக ஏறக்குறைய, 12 ஆயிரம் சதுரஅடி பரப்பில், இக்கட்டடம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !