மேலும் செய்திகள்
பள்ளி அருகே குவித்த குப்பை அகற்றம்
05-Aug-2024
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி அருகே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில், குடியிருப்பு வீடுகள் மட்டுமின்றி வங்கிகள், ஓட்டல்கள் என, பலதரப்பட்ட வணிகக் கடைகள் அதிகரித்துள்ளன. வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகளில் சேகரமாகும் குப்பை, நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு, அகற்றப்படுகின்றன.இருப்பினும், பலர், ரோட்டோரத்தில் குப்பைகளை வீசிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேநேரம், சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி வளாகம் ஒட்டி குப்பை குவிக்கப்பட்டுள்ளது. அங்கு, குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:வீடுகள் மற்றும் வணிகக் கடைகளில் இருந்து முறையாக குப்பைகளை சேகரம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரங்களில், சமத்துார் ராம ஐயங்கார் பள்ளி அருகே, சிலர் குப்பை கொட்டிச் செல்கின்றனர்.அருகில், மேல்நிலை நீர்த் தொட்டியும், டிரான்ஸ்பார்மர் இருந்தும், பலர் விதிமீறலில் ஈடுபடுகின்றனர். இறைச்சிக் கழிவுகளும் குவிந்து கிடக்கிறது. அவ்வபோது, எரியூட்டப்படும் கழிவுகளால், துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.பள்ளி மாணவ, மாணவியரும் பாதிக்கின்றனர். எனவே, பள்ளி வளாகம் ஒட்டி குப்பைக் கொட்டுவதைக் தடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
05-Aug-2024