உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திடக்கழிவு கூடாரம் அருகே குவிந்து கிடக்கும் குப்பை

திடக்கழிவு கூடாரம் அருகே குவிந்து கிடக்கும் குப்பை

பொள்ளாச்சி : குள்ளக்காபாளையம், சடையகவுண்டனூரில் ரோட்டின் ஓரத்தில் திடக்கழிவு மேலாண்மை கூடம் அருகில், குப்பை குவிகப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் ஊராட்சி, சடையகவுண்டனூரில் இருந்து செங்குட்டைபாளையம் செல்லும் பிரதான ரோட்டில், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த ரோட்டின் ஓரத்தில், திடக்கழிவு மேலாண்மை கூடம் அருகில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், திடக்கழிவு மேலாண்மை கூடத்தை சுற்றிலும் செடிகள் முளைத்து உள்ளது. கதவுகள், கம்பிகள் என அனைத்திலும் செடி, கொடிகள் படர்ந்து உபயோகத்தில் இல்லாத நிலையில் காணப்படுகிறது.எனவே, இங்கு உள்ள குப்பையை அகற்றம் செய்து, மக்கள் பொதுவெளியில் குப்பை குவிக்காதவாறு, ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே குப்பை தொட்டி வைத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ