உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூரடிகளார் மருத்துவமனையில் பொது மருத்துவ முகாம்

பேரூரடிகளார் மருத்துவமனையில் பொது மருத்துவ முகாம்

அன்னுார்: பேரூரடிகளார் மருத்துவமனையில், மூன்று நாள் பொது மருத்துவ முகாம் நேற்று துவங்கியது.கணேசபுரத்தில் உள்ள பேரூரடிகளார் மருத்துவமனையில், சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மூன்று நாள் பொது மருத்துவ முகாம் நேற்று துவங்கியது.தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியம் முகாமை துவக்கி வைத்தார். ஹரிமோகன் குமார், முதல் சலுகை அட்டையை பெற்றுக் கொண்டார். ரத்த பரிசோதனையை டாக்டர் சித்ரா துவக்கி வைத்தார்.முகாமில் சலுகை கட்டணத்தில் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, நாடித்துடிப்பு உள்ளிட்டவை செய்யப்பட்டது. குறைந்த கட்டணத்தில் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.மருத்துவமனையில் கட்டண சலுகை அட்டை பெற்று ஆண்டு முழுவதும் சலுகை கட்டணத்தில் மருத்துவ ஆலோசனை பெறலாம். பரிசோதனை செய்து கொள்ளலாம். மருந்துகள் பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.முகாம் தொடர்ந்து, இன்றும், நாளையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !