உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசுப்பள்ளி முப்பெரும் விழா

அரசுப்பள்ளி முப்பெரும் விழா

போத்தனூர்; மதுக்கரையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின், இலக்கிய மன்ற நிறைவு, விளையாட்டு மற்றும் புரவலர்கள் பாராட்டு ஆகிய முப்பெரும் விழா, பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ் தலைமையில் நடந்தது.மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜஹான், சென்னை மூத்த வக்கீல் முத்துசாமி ஆகியோர் அரசு பொது தேர்வில், பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தோருக்கு பரிசு வழங்கினர்.முன்னதாக, தலைமையாசிரியர் ஷகிலா வரவேற்றார். மேலாண் குழு நிர்வாகி சாலம்பாஷா, மாணவர்கள் திறன் குறித்து பேசினார்.பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய வக்கீல் முத்துசாமி, பாலு, முன்னாள் மதுக்கரை பேரூராட்சி தலைவர் சாலம்பாஷா உள்பட, 14 பேர் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ