மதுக்கரை குறுமைய செஸ் போட்டியில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் போர்
கோவை:மதுக்கரை குறுமைத்துக்குட்பட்ட செஸ் போட்டியில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ, மாணவியர் திறமைகளை வெளிப்படுத்தினர்.மதுக்கரை குறுமைய செஸ் போட்டி, எஸ்.என்.எம்.வி., கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சுப்ரமணி, மேலாண்மை துறை இயக்குனர் முத்துகுமார், செட்டிபாளையம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர், போட்டிகளை துவக்கிவைத்தனர்.இறுதிப்போட்டியில், 11 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவர் கவின் மதியன், ஜே.ஜே. நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஹர்வின், ஸ்ரீ பி மல்லையன் மெட்ரிக் பள்ளி அம்ரிஷ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மாணவியர் பிரிவில், பி.எம்.ஜி., மெட்ரிக் பள்ளி ஜோஸ்நிகா, டாக்டர் வி.ஜி.என்., மெட்ரிக் பள்ளி கிருத்திகா, புனித அன்னை மெட்ரிக் பள்ளி ரேஷ்மிகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், குரும்பபாளையம் அரசு பள்ளி பரத், ஒத்தக்கால்மண்டபம் அரசு பள்ளி கவின், மதுக்கரை அரசு பள்ளி தேவேந்திரன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.பெண்கள் பிரிவில், ஸ்ரீ மல்லையன் மெட்ரிக் பள்ளி அமிர்தா, கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளி கனிஸ்கா, திருமலையாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சபர்னா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், பி.எம்.ஜி., மெட்ரிக் பள்ளி சரவணன், ஒத்தக்கால்மண்டபம் அரசு பள்ளி திரிசாந்த், எல்ஜி மெட்ரிக் பள்ளி ஸ்ரீ சபரி கார்த்திகேயன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மாணவியர் பிரிவில், பிச்சனுார் அரசு பள்ளி பரமேஸ்வரி, ஸ்ரீ பி மல்லையான் மெட்ரிக் பள்ளி நிவேதா, வெள்ளலுார் எல்ஜி பள்ளி தனிகாஸ்ரீ ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 19 வயதுக்குட்ட மாணவர் பிரிவில், எல்ஜி மெட்ரிக் பள்ளி தனுஷ், ஒத்தக்கால்மண்டபம் அரசு பள்ளி மதன், எல்ஜி மெட்ரிக் பள்ளி ஜெயகிசான் ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மாணவியர் பிரிவில், பிச்சனுார் அரசு பள்ளி மாதங்கி, புனித அன்னை மெட்ரிக் பள்ளி துர்கா, பிச்சனுார் அரசு பள்ளி ஹரிதா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களை, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.