உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் சார்பில்  குறைதீர் முகாம் 

போலீஸ் சார்பில்  குறைதீர் முகாம் 

கோவை : மாவட்ட போலீஸ் சார்பில், பொது மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சமரச தீர்வு காணும் வகையில், குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்கள் மீது, விசாரணை மற்றும் மறுவிசாரணை நடத்தப்பட்டது. அதில் நான்கு மனுக்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. 73 மனுக்களுக்கு சுமூக தீர்வும், 13 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது. கூடுதல் எஸ்.பி., துணை எஸ்.பி., ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி