உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மளிகை பொருட்கள் திருட்டு: மாணவர்கள் உள்பட 3 கைது

மளிகை பொருட்கள் திருட்டு: மாணவர்கள் உள்பட 3 கைது

சூலுார்; சூலுார் அருகே அப்பநாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான மளிகை பொருட்கள் குடோன் உள்ளது. நேற்று முன்தினம் இருப்பு சரிபார்க்கையில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முந்திரி பருப்பு, நல்லெண்ணெய் பாக்கெட்டுகள் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து சூலுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.விசாரணையில், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த இச்சிப்பட்டியை சேர்ந்த தாமரை கண்ணன், 30, இன்டன்ஷிப் பயிற்சிக்கு வந்த, மதுரையை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் முகமது கைப், 19, கங்கா சூர்யா, 20 ஆகியோர் பொருட்களை திருடியது தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ