மேலும் செய்திகள்
'திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும்'
20-Aug-2024
'திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும்'
20-Aug-2024
''எ ன் வாழ்நாளில், 34 ஆண்டுகளை தேசத்தின் பாதுகாப்பு பணிக்காக அர்ப்பணித்து விட்டேன். இனி எஞ்சி இருக்கும் காலத்தை, திருவள்ளுவரின் திருக்குறளுக்காகவும், திருமூலரின் திருமந்திரத்துக்காவும் அர்ப்பணிக்க வேண்டும்,'' என்கிறார் திருக்குறள் ஆய்வாளர் மனோகரன்.பிரதமர் சிறப்பு பாதுகாப்பு படையில், 10 ஆண்டுகள் கமாண்டன்ட் ஆக பணியாற்றி, மத்திய காவல்துறை கண்காணிப்பளராக, ஓய்வு பெற்றவர் மனோகரன். இவர் தமிழ் மீதும், திருவள்ளுவரின் குறள் மீதும் கொண்ட, அதீத பற்று காரணமாக திருக்குறளை ஆய்வு செய்தார். அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையும் ஆய்வு செய்து, மூன்று தொகுப்புகளாக எழுதி, நுாலாக்கி இருக்கிறார்.திருமூலரின் திருமந்திரம் குறித்த, ஒரு ஆய்வு நுாலும் வெளி வந்துள்ளது. திருவள்ளுவரையும், திருமூலரையும் தனது இரு கண்களாக நேசிக்கும் ஆய்வாளர் மனோகரனை சந்தித்து பேசினோம்.... பள்ளி காலத்தில் இருந்தே...
என் அப்பா பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், போலீசாக இருந்தவர். அவரை சிறுவயதில் இருந்து யூனிபார்மில் பார்த்து வளர்ந்ததால், எனக்கும் போலீஸ் ஆகவேண்டும் என்ற ஆசை வந்தது.அதனால் கல்லுாரி படிப்பை முடித்தவுடன், சி.ஆர்.பி.எப்.,ல், எஸ்.ஐ., ஆக பணியில் சேர்ந்தேன்.பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து, திருக்குறள் மீது எனக்கு இருந்த ஆர்வம் குறையவில்லை.முக்கியமான பாதுகாப்பு பணியில் இருந்ததால், புத்தகம் படிக்கும் வாய்ப்பு அதிகம் இல்லை. விடுமுறை நாட்களில் திருக்குறள், திருமந்திரம் படிப்பேன். பணி ஓய்வுக்கு பிறகு, திருக்குறளை முழுமையாக படித்து ஆய்வு செய்ய, முடிவு செய்தேன். தினம் ஒரு திருக்குறள்
அதன்படி, 'பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 'தினம் ஒரு திருக்குறள்' என்ற பெயரில், நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்து, 1330 குறள்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், மூன்று பாகங்களாக புதிய உரை எழுதி இருக்கிறேன்.இன்பத்துப்பால் வெளிவந்து விட்டது. அறத்துப்பால், பொருட்பால் அச்சில் உள்ளது. திருமூலரின் திருமந்திரத்தில், 135 பாடல்களுக்கு உரை எழுதி நுாலாக வந்துள்ளது. திருக்குறளும், திருமந்திரமும் உலக தத்துவம். திருக்குறளுக்கு முழுமையாக உரை எழுதிவிட்டேன். இனி திருமந்திரத்தின், 3000 பாடலுக்கான விளக்கத்தை எழுதி முடிக்க வேண்டும். இதுதான் எனது வாழ்நாள் லட்சியம்.மனோகரனின் லட்சியம் நிறைவேற, வாழ்த்து கூறி விடைபெற்றோம்.
20-Aug-2024
20-Aug-2024