மேலும் செய்திகள்
ஹிந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
28-Aug-2024
பொள்ளாச்சி;வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தில், ஹிந்துக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை பாதுகாக்கக் கோரி, தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.ஹிந்துக்களை பாதுகாக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநிலச் செயலாளர் அண்ணாதுரை, கோட்டச் செயலாளர்கள் பாலச்சந்தர், அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.*வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். நகர தலைவர் சதீஷ், பொதுச்செயலாளர் லோகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், ஹிந்துமுன்னணி மாவட்ட துணைத்தலைவர் பேச்சிமுத்து, மாநில பேச்சாளர் திருநாவுக்கரசு, பா.ஜ., விஷ்வ ஹிந்த் பரிஷத் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
28-Aug-2024