உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சியில் பஸ் ஓட்டுநர்கள் சிலர் அத்துமீறலால் பயணியர் அச்சம்

பொள்ளாச்சியில் பஸ் ஓட்டுநர்கள் சிலர் அத்துமீறலால் பயணியர் அச்சம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இயக்கப்படும் சில தனியார் பஸ்களில், ஓட்டுநர்கள் மொபைல்போனில் சுவாரஸ்யமாக பேசியபடி பஸ் இயக்குவதால் பயணியர் அச்சமடைகின்றனர்.பொள்ளாச்சி நகரில் இருந்து, சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ் மட்டுமின்றி தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில், பயணியர் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.இருப்பினும், சில ஓட்டுநர்கள், சீருடை அணியாமல் பஸ்சை இயக்கி வருகின்றனர். இதுஒருபுறமிருக்க, அவ்வப்போது, ஓட்டுநர் மொபைல்போன் பேசியபடி பஸ்சை இயக்குகின்றனர்.மேலும், சாகசம் செய்வதை போல் ஒரே கையால் 'ஸ்டேரிங்' திருப்புவதையும், 'ஹாரன்' ஒலிக்கச் செய்து, வேகமாக பஸ்சை இயக்குகின்றனர். இது குறித்து, பயணியர், ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பினாலும் முறையாக பதில் அளிப்பதில்லை என, புகார் எழுகிறது.சமீபத்தில், தனியார் பஸ் ஓட்டுநர் ஒருவர், குடிபோதையில் இருப்பதை கண்டறிந்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், பஸ்சியில் பயணிக்கும் பயணியர் அச்சத்தில் உறைகின்றனர்.மக்கள் கூறியதாவது:தனியார் பஸ் ஓட்டுநர்கள், கண்டக்டர்கள் பணியின் போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிவதில்லை. மாறாக, அதிவேகமாக பஸ்சை இயக்குவது, முன்னால் செல்லும் வாகனங்களை விதிமீறி முந்திச் செல்ல முற்படுவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.முன்பக்க இருக்கைகளில் பெண்கள் மட்டுமே அமர்ந்து பயணிப்பதால், அவர்கள் மொபைல்போனில் பேசுவதைக் கண்டறிந்து தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவ்வப்போது, துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை