உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலாபயணியர் குளிக்க தடை நீட்டிப்பு

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலாபயணியர் குளிக்க தடை நீட்டிப்பு

வால்பாறை:கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். கடந்த மாதம், கேரள மாநிலம், அதிரப்பள்ளியில் பெய்த கனமழையால், நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.இந்நிலையில், கடந்த வாரம் கேரளாவில் மழைப்பொழிவு குறைந்த நிலையில், நீர்வீழ்ச்சியை காண வனத்துறையினர் அனுமதித்தனர். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பகுதியில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு செல்லவும், குளிக்கவும் கேரள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திடீர் தடை விதிப்பால், இருமாநில சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கேரளாவில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணியர் நீர்வீழ்ச்சி அருகே செல்லவும், குளிக்கவும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், துாரத்தில் இருந்தபடி அதை கண்டு ரசிக்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி