உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெயிலின் தீவிரம் அதிகரிப்பு தீ விபத்துகளால் பரபரப்பு

வெயிலின் தீவிரம் அதிகரிப்பு தீ விபத்துகளால் பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வளந்தாயமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி அருகே, வளந்தாயமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படாத அறையில் பழைய பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இது குறித்து, தீயணைப்புத் துறையினருக்கு, மருத்துவ ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். வேகமாக பரவாமல் தீயை அணைத்தனர். இரண்டு ஜன்னல் மட்டும் சேதமடைந்தது.ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, காய்ந்த செடி, கொடிகளில் பரவிய தீ அணைக்கப்பட்டது.குப்பையில் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.* கிணத்துக்கடவு அருகே உள்ள பனப்பட்டியில், ஆறுச்சாமி என்பவரது தோட்டம் அருகே உள்ள நீரோடை பகுதியில் காய்ந்த செடி கொடிகள் ஏராளம் உள்ளது. இதில், திடீரென தீ பற்றி, தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் பரவியது. இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !