உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாத்துார் பிரிவு சந்திப்பில் மேம்பாட்டு பணி ஆய்வு

தாத்துார் பிரிவு சந்திப்பில் மேம்பாட்டு பணி ஆய்வு

ஆனைமலை;ஆனைமலை அருகே, தாத்துார் பிரிவு சந்திப்பு மேம்பாட்டு மற்றும் ரோடு அகலப்படுத்தும் பணியை, கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.ஆனைமலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட, அம்பராம்பாளையம் - சேத்துமடைரோட்டில் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த ரோட்டில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், தாத்துார் பிரிவு பகுதியில் சந்திப்பு மேம்பாட்டு மற்றும் ரோடு அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள, 2.85 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.அதன்படி, 10 மீட்டர் ரோடு அகலப்படுத்தப்பட்டு, தார் சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணசெல்வம் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை