உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரிகளுக்கு இடையே கிரிக்கெட்; பங்கேற்க வாங்க

கல்லுாரிகளுக்கு இடையே கிரிக்கெட்; பங்கேற்க வாங்க

கோவை, பிப். 27-மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடக்கும், கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.கோயம்புத்துார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் கல்லுாரிகளுக்கு இடையே 'சி.எஸ்.கே.,-சி.டி.சி.ஏ., டி20' கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டி மார்ச் மாதம் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்பும் அணிகள் மார்ச் 3ம் தேதிக்குள், ஆவாரம்பாளையம் ரோடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள, மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என, சங்க செயலாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !