உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்ற இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை மக்கள் கண்முன் துடிதுடித்து இறந்த பரிதாபம்

வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்ற இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை மக்கள் கண்முன் துடிதுடித்து இறந்த பரிதாபம்

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், வெறிநாய்க்கடி சிகிச்சைக்கு வந்த வடமாநில நபர், கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர், 35. இவர், கோவை சிட்ரா பகுதியில் தங்கி, அருகில் உள்ள ஒரு கார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன், ராம் சந்தரை தெருநாய் கடித்தது. அவர், சிகிச்சை எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் பரிசோதித்ததில், அவருக்கு 'ரேபிஸ்' நோய் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அவரை வெறிநாய்க்கடி சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.நோய் பாதிப்பால் ஏற்பட்ட விரக்தியில், அவர் நேற்று முன்தினம் மதியம், அங்கிருந்த நோட்டீஸ் போர்டு கண்ணாடியை கைகளால் குத்தி உடைத்து, கண்ணாடி துண்டால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். காயத்தால் ரத்தம் கொட்டி, வலியால் துடிதுடித்தார்.அந்த அறையில் வேறு யாரும் இல்லாததால், ரத்தம் சொட்டச்சொட்ட அலறியபடி அங்குமிங்கும் அலைந்தார்.வாயில் இருந்து உமிழ் நீர் ஒழுகியபடி இருந்தது. நாய் போல அறை முழுதும் அலைந்தார். ஒழுகிய ரத்தத்தை விரலால் தொட்டு, தன் மொபைல் போன் எண்ணை தரையில் எழுதினார். அவரது மரண போராட்டத்தை, அறையின் வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களால், அந்நிகழ்வை போனில் படம் பிடிக்க மட்டுமே முடிந்தது. தகவல் அறிந்து வந்த டாக்டர்களும், அவரை நெருங்கவில்லை. அனைவரது கண் முன், இறுதியில், அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ