வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜாதி ஒரு தடையல்ல. முயன்றால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளளது.
கோவை; கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தமிழிசை, 2023-24ம் கல்வியாண்டில், தமிழக பள்ளி கல்வித்துறையால் நடத்தப்பட்ட கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்றார்.அதில், மாநில அளவில் ஆங்கிலம் கதை எழுதும் பிரிவில் இரண்டாமிடம், வேலுநாச்சியார் நாடகத்தில் இரண்டாமிடம், மாவட்ட அளவில் பறை இசையில் முதலிடம், ஆங்கிலம் கதை எழுதுவதில் முதலிடம், வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு நாடகத்தில் முதலிடம் என ஐந்து பரிசுகளை பெற்றார்.அவரது தனித்திறமையையும், அதிக அளவில் பரிசு பெற்றதையும் பாராட்டி கலையரசி விருதை, பள்ளி கல்வித்துறை வழங்கியது.அவரை, பிப்., 24 - 28 வரை ஐந்து நாட்களுக்கு மலேசியா சுற்றுலாவுக்கு, அரசு தேர்வு செய்துள்ளது. மாணவி தமிழிசையை, பள்ளி தலைமையாசிரியர் மணிமாலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வழியனுப்பினர்.
ஜாதி ஒரு தடையல்ல. முயன்றால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளளது.