ராமர் கோயிலில் சொற்பொழிவு நிறைவு
கோவை: ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில் காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி ஸ்ரீ கல்யாணராமன், ஜூலை 23 முதல் ராமாயண சொற்பொழிவு நடத்தினார். நேற்று நிறைவடைந்தது. தினமும் மாலை 6:30 முதல் 8:30 மணி வரை நடந்த சொற்பொழிவில் நேற்று ராம ராவண யுத்தம் பற்றியும், ஸ்ரீ ராமர்பட்டாபிேஷகம் பற்றியும் சொற்பொழிவு நிகழ்த்தினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.