மேலும் செய்திகள்
தலைக்கவசம் அணிவதற்கு போலீசார் விழிப்புணர்வு
30-Aug-2024
கோவை : காளப்பட்டி, நேரு நகர், சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், போக்குவரத்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.உயிர் கிளப் மற்றும் கோவை போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில், தலைக்கவச விழிப்புணர்வு பிரசாரத்தை மாணவர்கள் நடத்தினர்.வாகனம் ஓட்டும் போது போனை பயன்படுத்தக் கூடாது, சீட் பெல்ட் அணிய வேண்டும், சிக்னலை மதிக்க வேண்டும், உள்ளிட்ட போக்குவரத்து விதிகள் குறித்து, வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கினர். இருசக்கர வாகன விபத்துகளில், தலையில் ஏற்படும் காயம் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து விளக்கி, கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தினர்.கல்லுாரியின் இயக்குனர் சேகர், போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், பீளமேடு காவல் நிலைய போலீசார், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
30-Aug-2024