உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் கால்நடைகள்: வாகன ஓட்டுநர்கள் அவதி

ரோட்டில் கால்நடைகள்: வாகன ஓட்டுநர்கள் அவதி

வால்பாறை: வால்பாறையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரோட்டில் நடமாடும் கால்நடைகளால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு, மக்கள் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக, வால்பாறை நகர், சோலையாறுடேம் ரோடு, சிறுகுன்றா, ரொட்டிக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில், உலா வரும் கால்நடைகளால், பொதுமக்கள் ரோட்டில் நடந்தும், வாகனங்களிலும் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.கால்நடைகள் நடமாட்டத்தால், சில நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகளை, நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான், ரோட்டில் கால்நடைகள் சுற்றுவதை கட்டுப்படுத்த முடியும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி