உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிேஷக விழா

பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிேஷக விழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது.பொள்ளாச்சியில், 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விசேஷ நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.கும்பாபிேஷகம் நடந்து, 22 ஆண்டுகள் ஆகிய நிலையில் மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதைத்தொடர்ந்து, கடந்த, 28ம் தேதி மஹா கணபதி ேஹாமத்துடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. யாக பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.நேற்று இரண்டாம் கால யாக துவக்கம், பாவனாபிேஷகம், சங்க்யா ேஹாமம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.மூன்றாம் கால யாக துவக்கம், வேதிகார்ச்சனை, வேதகாம, திருமுறை இன்னிசை விண்ணப்பம், நவசக்தி அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதில், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, இன்று காலை, 5:30 மணிக்கு நான்காம் கால யாக துவக்கம், பிம்பசுத்தி, காலை, 8:15 மணிக்கு பத்ரகாளியம்மன் விமான கோபுரம், பரிவார விமானங்கள் மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.காலை, 8:45 மணிக்கு மேல், 9:15 மணிக்குள் விநாயகர் முதற்கொண்டு அனைத்து பரிவாரங்கள் மற்றும் அன்னை பத்ரகாளியம்மன் மூலாலய மஹா கும்பாபிேஷகம், மஹாஹவிர் நிவேதனம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.காலை, 9:00 மணிக்கு மேல் அன்னதானமும்; மாலை, 5:30 மணிக்கு மஹா அபிேஷகம், விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, நாளை (31ம் தேதி) முதல், 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை