உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காமராஜபுரத்தில் மாஸ் கிளீனிங்

காமராஜபுரத்தில் மாஸ் கிளீனிங்

கோவை : கோவை மாநகராட்சி, 69வது வார்டு காமராஜபுரம் பகுதியில் 'மாஸ் கிளீனிங்' நேற்று நடந்தது.மழை நீர் வடிகால் துார்வாருதல், சாலைகளில் படிந்திருந்த மண் அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தி தடுத்தல், கொசு புகை மருந்து அடித்தல், கட்டட இடிபாடுகளை அகற்றுதல், மின் கம்பங்களில் படர்ந்திருந்த செடி கொடிகளை வெட்டுதல், மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அகற்றுதல், புதர்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.இப்பணியை, கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி ஆகியோர் துவக்கி வைத்தனர். மத்திய மண்டல தலைவர் மீனா, நிலைக்குழு தலைவர்கள் மாரிச்செல்வன். சாந்தி, நகர் நல அலுவலர் பூபதி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ஆண்டியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ