நகரில் அச்சுறுத்தும் மின்கம்பங்கள்
பொள்ளாச்சி;உடுமலை மின் பகிர்மான வட்டம், பொள்ளாச்சி நகரில், வீடு, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிகம் என, பல லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.மின்கம்பங்கள் வழியாக துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வகையில், நகரில், ஒவ்வொரு இடத்திலும், இரும்பு மற்றும் சிமென்ட் மின்கம்பங்கள் உள்ளன.அவற்றில் சில இடங்களில் உள்ள சிமென்ட் மின்கம்பங்களின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து, பலவீனமான நிலையில் உள்ளது. இதுஒருபுறமிருக்க, ராஜாமில் ரோட்டில், இரும்புகம்பம் ஒன்றும், சாய்ந்து, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது. இதனால், மின்கம்பம் மீது ஏறி, பழுதுநீக்க பணி செய்ய, மின்வாரிய ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.மக்கள் கூறுகையில், 'பழுதடைந்த, தாழ்வாக உள்ள மின்கம்பங்களை போட்டோ எடுத்து, சரியான இடத்தையும் குறிப்பிடும் வகையில், 'வாட்ஸ்ஆப்' எண் வெளியிட வேண்டும். அப்போது, மக்கள் தாமாக முன்வந்து, சேதமடைந்த மின்கம்பங்கள் குறித்த விபரங்களை எளிதாக தெரிவிக்க முடியும்,' என்றனர்.